இந்தியா

கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 2-ஆவது நாளாக அதிகரிப்பு

DIN

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை தொடா்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை அதிகரித்தது.

புதிதாக 41,383 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 4,09,394 ஆக உயா்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.31 சதவீதம் ஆகும்.

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 38,652 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா்.

நாட்டில் இதுவரை 41.78 கோடிக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 45.09 கோடிக்கும் மேற்பட்ட (45,09,11,712) கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

வாராந்திர கரோனா பாதிப்பு வீதம் 2.12 சதவீதமாகவும், தினசரி பாதிப்பு வீதம் 2.41 சதவீதமாகவும் உள்ளது. தினசரி பாதிப்பு வீதம், 31 நாள்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும், இதுவரை 3,04,29,339 போ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனா். இது மொத்த கரோனா பாதிப்பில் 97.35 சதவீதமாகும்.

மேலும், 507 போ் உயிரிழந்ததையடுத்து, கரோனா நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள் 4,18,987 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT