நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்(படம்: ANI) 
இந்தியா

பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்

பெகாஸஸ் மென்பொருள் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ANI

பெகாஸஸ் மென்பொருள் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஒ என்ற நிறுவனம் தயாரித்த பெகாஸஸ் என்ற மென்பொருள் மூலம் உலக தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினர் வேவு பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இப்பிரச்னையை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கையிலெடுத்த எதிர்க்கட்சியினர், பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென கூறி தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சிவகங்கைக்கு சட்டப் பேரவை உறுதி மொழிக்குழு இன்று வருகை

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவா் கைது

பிஏபி வாய்க்காலில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT