இந்தியா

ரயில்வே போக்குவரத்து வருவாய் ரூ.34,145 கோடியாக சரிவு

DIN

இந்திய ரயில்வேயின் மொத்த போக்குவரத்து வருவாய் 2020-21 நிதியாண்டில் ரூ.34,145 கோடியாக சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

கடந்த 2020-21 நிதியாண்டில் ரயில்வே ஈட்டிய மொத்த வருவாய் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.34,145 கோடியாக சரிவடைந்துள்ளது.

பயணிகள் மூலமான வருவாய் ரூ.35,421 கோடியாகவும், இதர பெட்டிகள் மூலமாக கிடைத்த வருவாய் ரூ.2,544 கோடியாகவும் இருந்தன.

சரக்கு போக்குவரத்துக்கான கட்டண அதிகரிப்பின் மூலம் வருவாய் சரிவு ஓரளவுக்கு ஈடுசெய்யப்பட்டது. இருப்பினும், பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை எதுவும் குறைக்கப்படவில்லை என்று அஷ்வினி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT