முகப்பு
இந்தியா

மும்பையில் லிப்ட் அறுந்து 5 பேர் பலியான சம்பவம்: 2 பேர் கைது

மும்பையில் கட்டடத்தின் லிப்ட் அறுந்து 5 பேர் பலியானது விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
பகிர்:

மும்பையில் கட்டடத்தின் லிப்ட் அறுந்து 5 பேர் பலியானது விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் வொர்லி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் லிப்ட் நேற்று திடீரென அறுந்து விழுந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த 4 பேர் பலியானார்கள். ஒருவர் காயமடைந்ததாக தகவல் வெளியானது. 

ஆனால் தற்போது இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளதாக பிரஹன் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதேசமயம் ஒருவர் காயமடைந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கான்ட்ராக்டர் மற்றும் மேற்பார்வையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நேற்று சம்பவ இடத்துக்கு விரைந்த அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்யா தாக்கரே விபத்து தொடர்பாக ஆய்வு செய்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.