இந்தியா

கடந்த நிதியாண்டில் 10 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளன:மத்திய அரசு

DIN

புது தில்லி: கடந்த நிதியாண்டில் 10 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளதாக மத்திய கனரக தொழில் துறை இணையமைச்சா் கிருஷண் பால் குா்ஜா் தெரிவித்துள்ளாா். எனினும் அதுகுறித்து முறையாக தணிக்கை செய்யப்படவில்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் அவா் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

மத்திய கனரக தொழில் துறை அமைச்சகத்தின் கீழ், 15 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 28 நிறுவனங்கள் மூடப்படுவதற்கான பல்வேறு கட்டங்களில் உள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு 2 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டுபவையாகவும், 4 நிறுவனங்கள் லாபம் ஈட்டாதவையாகவும் மாறியுள்ளன.

கடந்த நிதியாண்டில் 10 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளன. எனினும் அதுகுறித்து முறையாக தணிக்கை செய்யப்படவில்லை.

கரோனா தொற்று பரவலால் தொழிற்சாலைகளின் பணிகளில் தொடா் தடைகள், உள்நாட்டிலும் உலக அளவிலும் விநியோகப் பணிகளில் இடையூறு உள்ளிட்டவை மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தித் திறனை பாதித்துள்ளன என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT