முகப்பு
இந்தியா

கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று ராஜிநாமா

கர்நாடக முதல்வராக பதவியேற்று 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், எடியூரப்பா தனது பதவியை இன்று ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Updated On : 26 ஜூலை, 2021 at 12:21 PM
கர்நாடக முதல்வர் எடியூரப்பா
பகிர்:

கர்நாடக முதல்வராக பதவியேற்று 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், எடியூரப்பா தனது பதவியை இன்று ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

2019-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி நான்காவது முறையாக எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது. இன்றுடன் (ஜூலை 26) முதல்வராக பதவியேற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள எடியூரப்பா, 3-ஆவது ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ளார்.

இந்நிலையில், பெங்களூரு, விதான சௌதாவில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்ற விழாவில் பேசிய எடியூரப்பா, இன்று பிற்பகல் ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அளிக்கவுள்ளதாக எடியூரப்பா அறிவித்தார்.

Advertisement

பாஜகவில் 75 வயதைக் கடந்தவா்கள் முக்கிய பதவிகளில் இருந்து விலகியிருக்கும் விதிமுறை உள்ளது. இந்நிலையில், எடியூரப்பாவுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதை, பலர் எதிர்த்து வந்தனர். 

இதையடுத்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கட்சித் தலைவர் நட்டா உள்ளிட்டோரை கடந்த வாரம் தில்லியில் சந்தித்து பேசிய எடியூரப்பா இந்த முடிவை எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.