முகப்பு
இந்தியா

பெகாஸஸ் விவகாரத்தால் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெகாஸஸ் விவகாரத்தால் அமளி ஏற்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 26 ஜூலை, 2021 at 11:51 AM
நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
பகிர்:

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெகாஸஸ் விவகாரத்தால் அமளி ஏற்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற இன்று காலை கூடியதும், கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு மாநிலங்களவை மற்றும் மக்களவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, ஒலிம்பிக்ஸில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாயி சானுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு, பெகாஸஸ் ஸ்பைவேர் மூலம் ஓட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தை விசாரிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர்.

Advertisement

இதையடுத்து மக்களவை பிற்பகல் 2 மணிவரையும், மாநிலங்களவை பிற்பகல் 12 மணிவரையும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.