'நான் ஜோதிடர் அல்ல': மம்தா
எதிர்க்கட்சிகளுக்கு தலைமை வகிக்கப்போவது யார் என்ற கேள்விக்கு, அதை கணித்துக் கூற தான் ஒன்றும் ஜோதிடர் அல்ல என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பதிலளித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளுக்கு தலைமை வகிக்கப்போவது யார் என்ற கேள்விக்கு, அதை கணித்துக் கூற தான் ஒன்றும் ஜோதிடர் அல்ல என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பதிலளித்துள்ளார்.
மம்தா பானர்ஜியின் உறவினரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆகியோர் வேவு பார்க்கப்பட்டிருக்கலாம் என தி வயர் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் லோகூர், ஜோதிர்மோய் பட்டாச்சார்யா ஆகியோர் தலைமையில் பெகாஸ்ஸ விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள மேற்குவங்க அரசு விசாரணை ஆணையம் அமைத்தது.
இதனிடையே, தில்லி சென்ற மேற்குவங்க முதல்வர் மம்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், "பெகாஸ்ஸ விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அனைவரும் உட்கார்ந்து இதற்கு தீர்வு காண வேண்டும்" என்றார்.
எதிர்க்கட்சிகளுக்கு தலைமை வகிக்கப்போவது யார் என்ற கேள்விக்கு, "அதை கணித்துக் கூற நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல. யாராவது ஒருவர் தலைவராக உருவெடுப்பார். அவருக்கு நான் ஆதரவு அளிப்பேன். நான் ஒரு கடைநிலை ஊழியர். தொடர்ந்து அப்படியே பணியாற்றுவேன்.
எனது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளது. யாரிடமும் பேசமுடியவில்லை. பெகாஸஸ் மூலம் நான் ஹாக் செய்யப்படவில்லை எனிலும், எனது உறவினர் அபிஷேக் பானர்ஜி, பிரசாந்த் கிஷோர் ஆகியோர் ஹாக் செய்யப்பட்டிருக்கலாம். ஒருவரின் போன் ஹாக் செய்யப்பட்டாலே மற்ற போன்கள் ஹாக் செய்யப்பட்டுவிடும்" என்றார்.