கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை 
இந்தியா

‘மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மாற்றமில்லை’: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

கர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மை மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

DIN

கர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மை மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வராக பதவிவகித்து வந்த எடியூரப்பா தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் தமிழ்நாடு - கர்நாடகம் இடையேயான மேக்கேதாட்டு அணை விவகாரம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. 

இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பசவராஜ் பொம்மை, “மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் முடிவில் மாற்றமில்லை” எனத் தெரிவித்தார்.

மேலும், “சட்டப்படி கர்நாடக அரசு சரியாகவே உள்ளது. காவிரி ஆற்றின் உபரிநீரை பயன்படுத்திக் கொள்ள கர்நாடக அரசுக்கு உரிமையுள்ளது” எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். 

கர்நாடக முதல்வரின் இந்தக் கருத்து அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கில்லர் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

ஜம்மு மருத்துவமனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் ராஜ்நாத் சிங் நலம் விசாரிப்பு

ராஜமௌலி படத்தின் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன்!

"கடக ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வரதட்சிணை கொலை: தப்பியோட முயன்ற கணவரை சுட்டுப்பிடித்த காவல் துறை!

SCROLL FOR NEXT