இந்தியா

கேரளத்தில் சனி, ஞாயிறுகளில் முழுப் பொதுமுடக்கம்

ANI

கேரள மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ள சூழலில், கேரள மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நாட்டில் பதிவாகும் மொத்த பாதிப்பில் 50 சதவீதம் கேரளத்திலிருந்து பதிவாகிறது.

இதையடுத்து கடந்த ஜூலை 24 மற்றும் 25இல் முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. எனினும், தொற்றின் பாதிப்பு குறையாததையடுத்து வருகின்ற ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1ஆம் தேதிகளில் முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரளத்தில் பரவி வரும் கரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அனுப்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT