நாடாளுமன்ற அவைகள் நாளை(ஜூலை 30) வரை ஒத்திவைப்பு 
இந்தியா

தொடரும் அமளி: நாடாளுமன்ற அவைகள் நாளை(ஜூலை 30) வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவைகள் நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

DIN

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவைகள் நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென கடந்த 8 நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை மக்களவை கூடியவுடன், பெகாஸஸ் பிரச்னை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இதையடுத்து காலை முதலே அவை ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில், விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்குமுறை ஆணைய மசோதனை நிறைவேற்றிய பிறகு, நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் உத்தரவிட்டார்.

அதேபோல், மாநிலங்களவையிலும் பெகாஸஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் தொகைமீட்பு நடைமுறை (ஃபேக்டரிங்) சட்டத் திருத்த மசோதா மற்றும் தேங்காய் மேம்பாட்டு வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்றி நாளை வரை அவையை ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT