முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் மேலும் 11,303 பேருக்கு கரோனா தொற்று

ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 11,303 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:21 PM
ஆந்திரத்தில் மேலும் 11,303 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 11,303 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

காலை 9 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் 93,704 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 11,303 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,04,388 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 104 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,034 ஆக உயர்ந்துள்ளது. 

24 மணி நேரத்தில் மேலும் 18,257 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 15,46,617 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 1,46,737 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.