இந்தியா

மகாராஷ்டிரம்: அகமத்நகரில் மே மாதத்தில் சுமார் 10,000 குழந்தைகளுக்கு கரோனா

DIN


மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரில் கடந்த மே மாதத்தில் மட்டும் குழந்தைகள், 18 வயதுக்குட்பட்ட இளம் வயது சிறார்கள் என 9,928 பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 89 பேர் ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகள், 3,052 பேர் 1- 10 வயதுடையவர்கள், 6,787 பேர் 11 - 18 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நல்ல வேளையாக இந்த வயதுக்குட்பட்ட கரோனா நோயாளிகளின் இறப்பு விகிதம் என்பது 0.5 சதவீதத்துக்குள் இருந்தது. குணமடைவோர் விகிதம் அதிகமாக இருந்தது. இந்த மாவட்டத்தில் மட்டும் கடந்த மே மாதத்தில் 86,000 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதில் அச்சப்பட ஒன்றுமில்லை என்றும், கடந்த மே மாதத்தில் பதிவான மொத்த கரோனா பாதிப்பில், இது வெறும் 11.5 சதவீதம்தான் என்று, இது இயல்பானதுதான் என்றும் மாவட்ட குழந்தைகள் நலன் குழுவின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

கரோனா பாதித்த 96 - 97 சதவீத இளம் சிறார்களுக்கு எந்த அறிகுறியும் இருக்கவில்லை. தற்போது சுமார் 350 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களும் வெறும் 6 பேர் தான் 18 வயதுக்குள்பட்டவர்கள் என்கிறது புள்ள விவரம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT