சுட்டுரையில் பயனாளர்களுக்கான நீல டிக் தரும் முறை மீண்டும் தொடக்கம் 
இந்தியா

சுட்டுரையில் பயனாளர்களுக்கான நீல டிக் தரும் முறை மீண்டும் தொடக்கம்

சுட்டுரையில் கணக்கு வைத்திருக்கும் பயனாளர்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் நீல டிக் தரும் முறை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

IANS


புது தில்லி: சுட்டுரையில் கணக்கு வைத்திருக்கும் பயனாளர்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் நீல டிக் தரும் முறை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சுட்டுரையில் கணக்கு வைத்திருப்போர், இனி நீல டிக் பெற விண்ணப்பிக்கலாம், இதுவரை அந்த நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததற்கு மன்னிக்கவும். இனி நீங்கள் நீல டிக் பெறலாம் என்று சுட்டுரை நிறுவனம் அறிவித்துள்ளது.

சுட்டுரை நிறுவனம், தனது பயனாளர்கள் டிக் மார்க் பெறும் கோரிக்கையை நடைமுறைப்படுத்தும் திட்டம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. அதில் அரசு, நிறுவனங்கள், பொழுதுபோக்கு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டு, நீல டிக் தரும் வழிமுறை தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப் பகுதி, பயனாளிகளின் சுட்டுரை செட்டிங் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டால், தானாகவே, பயனாளியன் பெயருடன் நீல டிக் இடம்பெறும். ஒரு வேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், மீண்டும் 30 நாள்களுக்குப் பின் விண்ணப்பிக்கலாம் என்றும் சுட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட்டுரையில் நீல நிற டிக் வழங்கும் முறையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் கடந்த 2017ஆம் ஆண்டில் அந்த நடைமுறை நிறுத்தப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் லட்சாா்ச்சனை

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT