அகர்தலா: அகர்தலா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா பாதிக்கப்பட்ட 225 கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளது. குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை மருத்துவர் ஜெயந்தா ரே கூறுகையில், முதல் கரோனா அலையின்போது, 198 கரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெற்றது. இதில் 60 பேருக்கு சிசேரியன் முறையில் பிரசவம் நடந்தது. இதுவே இரண்டாவது கரோனா அலையின்போது 27 பேருக்கு சிசேரியன் முறையில் பிரசவம் நடைபெற்றுள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் குறைந்தபட்சம் 225 கரோனா பாதித்த கர்ப்பிணிகள் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். அந்த வகையில் மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் பங்கு சிறப்பாக அமைந்திருந்தது.
கரோனா பாதித்த கர்ப்பிணிகளின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் மிகச் சிரமமான பணியை மருத்துவர்கள் செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.