சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்: இரு வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு 
இந்தியா

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்: இரு வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு எதனடிப்படையில் மதிப்பெண் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

DIN

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு எதனடிப்படையில் மதிப்பெண் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து 2 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரி முன்பு வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தற்போது விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம்,

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களின் நலனில் சமரசம் செய்துகொள்ள முடியாது என்று மத்திய அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று தெரிவித்தது.

இது தொடர்பாக ஆஜரான மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், 3 வாரங்களில் அனைத்து விவகாரங்களிலும் விரைந்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

எனினும், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக குறைந்தபட்சம் 2 வாரங்களில் அனைத்து முடிவுகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுகள், மாநிலப் பாடத்திட்ட பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்யும் மாநில அரசுகளுக்கும் வழிகாட்டியாய் அமையும் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணங்கள்... வண்ணங்கள்...

வரப்பெற்றோம் (03.11.2025)

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

SCROLL FOR NEXT