பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் தில்லியில் கைது
தில்லி காவல்துறை கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
புது தில்லி: தில்லி காவல்துறை கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தில்லியின் வடகிழக்குப் பகுதியான கஜுரி காஸ் என்ற இடத்தில் வசித்து வந்த சல்மான் என்கிற ஆர்மனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், தான் சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக இவ்வாறுக் கூறியதாகக் அவர் கூறியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே 2018-ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைதாகி, சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்ததும் போதைப் பழக்கம் கொண்டவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலை மிரட்டல் விடுக்கும் போது, போதைப் பொருள் பயன்படுத்தியிருந்ததும், அவரது தந்தை திட்டியதால், வீட்டிலிருக்க பிடிக்காமல், இவ்வாறு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.