இந்தியா

குஜராத்தில் ஜூன் 7 முதல் 100% ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்க அனுமதி

PTI


ஆமதாபாத்: கரோனா பெருந்தொற்று பரவலின் தீவிரம் குறைந்து வரும் நிலையில், குஜராத்தில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் ஜூன் 7 முதல் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இந்த முடிவை எடுத்திருப்பதாக அவரது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து அரசு அலுவலகங்களும் ஜூன் 5ஆம் தேதி சனிக்கிழமையும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் முதல் குஜராத்தில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது கரோனா பாதிப்பு குஜராத்தில் குறைந்து வருவதையடுத்து இந்த தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT