‘இரு தினங்களுக்கு மட்டுமே கோவாக்சின் தடுப்பூசிகள் கையிருப்பு‘: தில்லி அரசு
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே கோவாக்சின் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மாநில சட்டப்பேரவை உறுப்பினர் அதிஷி தெரிவித்துள்ளார்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே கோவாக்சின் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மாநில சட்டப்பேரவை உறுப்பினர் அதிஷி தெரிவித்துள்ளார்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது.
இந்நிலையில் தில்லியில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆமாத்மி சட்டப்பேரவை உறுப்பினர் அதிஷி, ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே கோவாக்சின் கரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.
18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஏற்கெனவே கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பு இல்லை என தெரிவித்த அதிஷி தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த கோவாக்சின் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
டெல்லி அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை 11,290 கோவாக்சின் தடுப்பூசிகளும் , 5,87,760 கோவிஷீல்ட் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.