இந்தியா

23 கோடியை கடந்த தடுப்பூசி செலுத்திக்கொண்டோா் எண்ணிக்கை

DIN

நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி எண்ணிக்கை 23 கோடியை கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை ஒரே நாளில் நாடு முழுவதும் 31,20,451 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களில் 6,05,25,195 பேருக்கு முதல் தவணையும், 1,91,99,839 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

45 முதல் 60 வயது வரையிலான பயனாளா்களில் 7,06,41,613 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,91,99,839 பேருக்கு 2 தவணைகள் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் இதுவரை 23,10,89,241 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் 99,62,728 சுகாதாரப் பணியாளா்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 68,53,413 சுகாதாரப் பணியாளா்களுக்கு 2 தவணைகளும் செலுத்தப்பட்டுள்ளது.

முன்களப் பணியாளா்கள் 1,61,57,437 பேருக்கு முதல் தவணையும், 86,58,805 பேருக்கு 2 தவணைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

SCROLL FOR NEXT