பொதுமுடக்கத் தளர்வுகள்: தில்லியில் போக்குவரத்து நெரிசல்
தில்லியில் கரோனா பரவல் குறைந்து வருவதன் எதிரொலியாக தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிலமணி நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தில்லியில் கரோனா பரவல் குறைந்து வருவதன் எதிரொலியாக தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிலமணி நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தில்லி நகரின் முக்கிய சாலைகளில் பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து சென்றன.
நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக தில்லியில் கடந்த சில நாள்களாக பொதுமுடக்கம் விதிக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது.
இதனால் பொருளாதார மீட்பு நடவடிக்கை காரணமாக தில்லியில் மெட்ரோ, பேருந்து போன்ற சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடைகள், சந்தைகள் போன்றவைகளும் விதிமுறைகளுக்குட்பட்டு செயல்பட அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், தில்லி நகரின் சாலைகளில் அதிக அளவிலான வாகனங்கள் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.