முகப்பு
இந்தியா

கோவேக்சின் தடுப்பூசி இரண்டாவது தவணை மட்டுமே செலுத்தப்படும்: தில்லி அரசு தகவல்

தில்லியில் கோவேக்சின் தடுப்பூசி இரண்டாவது தவணை மட்டுமே வழங்கப்படும் என தில்லி அரசு தெரிவித்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:20 AM
கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் கோவேக்சின் தடுப்பூசி இரண்டாவது தவணை மட்டுமே வழங்கப்படும் என தில்லி அரசு தெரிவித்துள்ளது. 

தில்லியில் கோவேக்சின் தடுப்பூசி குறைவாக இருப்பு உள்ளதால் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது தவணை மட்டுமே வழங்கப்படும் என்றும் 18-44 வயதுடையவர்களுக்கு முதல் தவணையாக கோவேக்சின் வழங்கப்படமாட்டாது என்றும் கூறியுள்ளது. 

அதாவது மே மாதத்தில் கோவேக்சின் முதல் தவணை எடுத்த 18-44 வயதுக்குட்பட்டவர்கள் இரண்டாவது தவணை எடுக்க வேண்டிய நேரம் இது. எனவே அவர்களுக்கான கோவேக்சின் இரண்டாவது தவணை மட்டும் வழங்கப்படும். 

மேலும் தில்லியில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பூசியை முதல் தவணையாக வழங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

கோவேக்சின் தடுப்பூசி பற்றாக்குறை குறித்து தில்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் தில்லி அரசு இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 

தில்லியில் இதுவரை 56,51,226 தவணைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இதில் 12,84,000 பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.