முகப்பு
இந்தியா

கரோனாவுக்கு தாயை இழந்த பச்சிளம் குழந்தை தொற்றிலிருந்து மீண்டது

பிறந்து 8 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை, கரோனாவுக்கு தனது தாயை பறிகொடுத்த நிலையில், தொற்றிலிருந்து மீண்டு முழுவதும் குணமடைந்துள்ளது.

Updated On : 7 ஜூன், 2021 at 11:49 AM
கரோனாவுக்கு தாயை இழந்த பச்சிளம் குழந்தை தொற்றிலிருந்து மீண்டது
பகிர்:


பெர்ஹாம்பூர்: பிறந்து 8 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை, கரோனாவுக்கு தனது தாயை பறிகொடுத்த நிலையில், தொற்றிலிருந்து மீண்டு முழுவதும் குணமடைந்துள்ளது.

ஒடிசா மாநிலம் கஞ்சம் பகுதியில் அங்கன்வாடி ஊழியரான தீப்திமயி தேவி, கர்ப்பிணியாக இருந்த நிலையில், கரோனா பாதிப்புக்குள்ளானார். அவருக்கு மே 29-ஆம் தேதி குழந்தை பிறந்த நிலையில், மறுநாளே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில், பிறந்த குழந்தைக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

குழந்தை மெல்ல கரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளது. முழுவதும் குணமடைந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை குழந்தை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தது. தற்போது குழந்தை தந்தையின் பராமரிப்பில் உள்ளது.

Advertisement

அந்தக் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.