கேரள காங்கிரஸ் தலைவராக கே. சுதாகரன் நியமனம்
கேரள காங்கிரஸ் தலைவராக கே. சுதாகரன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள காங்கிரஸ் தலைவராக கே. சுதாகரன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதாகரன் தவிர்த்து கே. சுரேஷ், பி.டி. தாமஸ் மற்றும் டி. சித்திக் ஆகியோர் கேரள காங்கிரஸ் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் சுதாகரன் கூறியது:
Advertisement
Advertisement
"இதை நான் பெரிய பொறுப்பாகப் பார்க்கிறேன். காங்கிரஸ் கட்சியைப் பெரிதளவில் மீட்டெடுக்கும் சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். இதற்கு கட்சியின் அனைத்துத் தலைவர்களின் உதவி மற்றும் ஒத்துழைப்பைக் கோருவேன். நிச்சயம் அவர்களது உதவி மற்றும் ஆதரவைப் பெறுவேன்."
சுதாகரன் 4 முறை எம்எல்ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது கண்ணூர் தொகுதியின் எம்.பி.யாக உள்ளார்.