முகப்பு
இந்தியா

தில்லி: தடுப்பூசி மையங்களைப் பார்வையிட்ட முதல்வர், துணை முதல்வர்

தில்லியில் கரோனா தடுப்பூசி மையங்களை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் பார்வையிட்டனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:21 AM
தடுப்பூசி மையங்களைப் பார்வையிட்ட முதல்வர், துணை முதல்வர்
பகிர்:

தில்லியில் கரோனா தடுப்பூசி மையங்களை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் பார்வையிட்டனர்.

நாடு முழுவதும் பரவி வரும் கரோனா இரண்டாம் அலையால் மாநில அரசுகள் திணறி வரும் நிலையில், தலைநகரான தில்லியில் கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென சிறப்புக் குழுவை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களிடம் கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து தடுப்பூசி பணி போடப்பட்டு வருகிறது. 

இதனிடையே கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை ஆய்வு செய்யும் விதமாக முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் சிசோடியா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 316 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →