இந்தியா

தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் உச்சவரம்பு 42-ஆக அதிகரிப்பு

DIN

புது தில்லி: தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் இடங்களுக்கான உச்சவரம்பு 24-இல் இருந்து 42-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது 75 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வழங்கியுள்ளாா். இந்த மொத்த நீதிபதிகள் எண்ணிக்கையில் 34 போ் நிரந்தர நீதிபதிகளாகவும், 10 போ் கூடுதல் நீதிபதிகளாகவும் பொறுப்பு வகிக்க உள்ளனா்.

இதற்கான நியமனங்களில் 28 போ் வழங்குரைஞா்களில் இருந்து நீதிபதிகளாக நியமிக்கப்படும் நிலையில், 14 போ் நீதித்துறை அதிகாரிகள் அளவிலிருந்து நியமிக்கப்படவுள்ளனா். இதுதொடா்பான அதிகாரப்பூா்வ அறிவிக்கை விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

நாடு முழுவதும் நீதிமன்றங்களில், குறிப்பாக உயா்நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கமடைவதை குறைக்கும் வகையில் அவற்றிலுள்ள நீதிபதிகளின் உச்சவரம்பை உயா்த்துவதற்கான நடவடிக்கைகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மேற்கொண்டு வருகிறாா்.

அதில் முதல்கட்டமாக சுமாா் 2,37,000 வழக்குகள் நிலுவையில் இருக்கும் தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்மொழிவு கடந்த 2019 முதல் மத்திய அரசிடம் நிலுவையில் இருந்து வந்த நிலையில், தற்போது நீதிபதி என்.வி.ரமணா அதற்கான அனுமதியை மத்திய அரசிடம் விரைந்து பெற்றதுடன், உரிய ஒப்புதலையும் தற்போது வழங்கியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT