கரோனா தினசரி பாதிப்பு 2வது நாளாக லட்சத்துக்கு கீழ் குறைந்தது
நாடு முழுவதும் கரோனா தினசரி பாதிப்பு இரண்டாவது நாளாக 1 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தினசரி பாதிப்பு இரண்டாவது நாளாக 1 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது. ஒரே நாளில் 1,62,664 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில். நாடு முழுவதும் இரண்டாவது நாளாக கரோனா தினசரி தொற்று பாதிப்பு 1 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது. 92,596 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,90,89,069 ஆக உள்ளது.
நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 12,31,415 -ஆக குறைந்துவிட்டது.
புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 1,62,664 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 2,75,04,126 -ஆக அதிகரித்துள்ளது.
அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 2219 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 3,53,528 -ஆக அதிகரித்துள்ளது.
தொடா்ந்து தினசரி புதிய பாதிப்புகளை விட, குணமடைபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேசியளவில் குணமடைவோா் சதவீதம் 94.29 சதவீதமாக உயா்ந்துள்ளது.
இதுவரை 37.1 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 23.90 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.