இந்தியா

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: முக்கிய குற்றவாளியை கைது செய்தது என்ஐஏ

DIN

புது தில்லி: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய சதிகாரராக குற்றம்சாட்டப்பட்டுள்ள முகமது மன்சூரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) புதன்கிழமை கைது செய்தது.

இதுதொடா்பாக என்ஐஏ செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘தங்கக் கடத்தல் வழக்கில் முகமது மன்சூருக்கு எதிராக என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து கோழிக்கோடு சா்வதேச விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்த அவரை என்ஐஏ கைது செய்தது. பின்னா் கொச்சியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவருக்கு, விசாரணைக்காக 5 நாள் என்ஐஏ காவல் விதிக்கப்பட்டது.

திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக அதிகாரிகளின் முகவரியை பயன்படுத்தி அந்த நாட்டிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தும் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முகமது ஷஃபி உள்ளிட்டோருடன் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்தே முகமது மன்சூா் சதித்திட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது’ என்றாா்.

கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்தின் பெயரில் அந்நாட்டிலிருந்து வந்த பாா்சலை சுங்கத் துறையினா் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் சோதனையிட்டனா். அதில் ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனா். இந்த விவகாரம் தொடா்பாக என்ஐஏ கடந்த ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. பின்னா் 20 பேருக்கு எதிராக குற்றம்சாட்டி நிகழாண்டு ஜனவரியில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT