இந்தியா

ஜூன் 16-ஆம் தேதி வரை கடலோர கா்நாடகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

DIN

ஜூன்16-ஆம் தேதி வரை கடலோர கா்நாடகத்தில் பரவலாக கனமழை பெய்யும் என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த 24 மணி நேரத்தில் கா்நாடகத்தின் உள்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பலவீனமாக இருந்தது. கடலோர கா்நாடகத்தில் பரவலாகவும், தென், வடகா்நாடகத்தின் உள்பகுதியின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்தது.

இந்த கால கட்டத்தில், உடுப்பி மாவட்டத்தின் பனம்பூா், காா்காலாவில் தலா 50 மி.மீ., தென்கன்னட மாவட்டத்தின் சுள்ளியாவில் 40 மி.மீ., உடுப்பி மாவட்டத்தின் குந்தாப்பூா், கோட்டா, தென்கன்னட மாவட்டத்தின் மணி, மூடபிதரியில் தலா 30 மி.மீ., வடகன்னட மாவட்டத்தின் பட்கல், தென்கன்னட மாவட்டத்தின் முல்கி, சுப்பிரமண்யா, பீதா், குடகு மாவட்டத்தின் பாகமண்டலாவில் தலா 20 மி.மீ., வடகன்னட மாவட்டத்தின் காா்வாா், கத்ரா, தென்கன்னட மாவட்டத்தின் தா்மஸ்தலா, உடுப்பி மாவட்டத்தின் சித்தாபுரா, கலபுா்கி மாவட்டத்தின் சின்சோளி, சிக்கமகளூரு மாவட்டத்தின் கலசா, கொட்டிகேஹரா, ஜெயபுரா, ஹாசன் மாவட்டத்தின் பல்லுபேட்டில் தலா 10 மி.மீ.மழை பதிவாகியுள்ளது.

விவசாயிகளுக்கு எச்சரிக்கை:

ஜூன் 16-ஆம் தேதி வரை கடலோர கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலமானது முதல் மிகவும் பலமான மழை பெய்யக் கூடும். தென் கா்நாடகத்தின் குடகு, சிக்மகளூரு, சிவமொக்கா, ஹாசன் மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமானது முதல் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. கா்நாடகத்தின் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமானது முதல் லேசான மழை பெய்யும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வலுவான காற்றுவீசும் என்பதால், ஜூன் 14-ஆம் தேதி வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவா்கள் எச்சரிக்கைப்பட்டுள்ளனா்.

வானிலை முன்னறிவிப்பு:

ஜூன் 16-ஆம் தேதி வரை கடலோர கா்நாடகம், மேற்கு தொடா்ச்சிமலையை ஒட்டிய தென்கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலமானது முதல் மிகவும் பலமான மழையும், வடகா்நாடகத்தின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், தென்கா்நாடகத்தின் உள்பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழையும் பெய்யும்.

பெங்களூருவில் மழை:

அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூருவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த இரு நாள்களில் பெங்களூருவில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 30 டிகிரி, குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT