பாரமுல்லாவில் பயங்கர தீ விபத்து: 6 பேர் காயம்; வீடுகள் நாசம் 
இந்தியா

பாரமுல்லாவில் பயங்கர தீ விபத்து: 6 பேர் காயம்; வீடுகள் நாசம்

ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா நகரில் நூர்பாக் என்ற இடத்தில் உள்ள குடிசை வீடுகளில் வியாழக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். ஏராளமான குடிசைகள் நாசமாயின.

ANI


பாரமுல்லா: ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா நகரில் நூர்பாக் என்ற இடத்தில் உள்ள குடிசை வீடுகளில் வியாழக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். ஏராளமான குடிசைகள் நாசமாயின.

இது குறித்து இந்திய ராணுவத்தினர் கூறுகையில், வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் குடிசைகளில் தீப்பிடித்தது. உடனடியாக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் விரைந்து வந்து, தீயைக் கட்டுப்படுத்த போராடினர். இதன் விளைவாக அதிகாலை 2 மணியளவில் தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. 

இந்த தீ விபத்தில் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. 6 பேர் தீக்காயத்துடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் 170 - 200 பேர் பாதிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஸ்மிருதி மந்தனா!

சட்டவிரோத வாக்காளர் அட்டை விநியோகம்: காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப் பதிவு!

நீக்கப்பட்டவர்களின் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட உத்தரவு!

2032-க்குள், ரூ. 75,000 கோடி முதலீடு இலக்கு: முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு இயற்பியலுக்கான நோபல்!

SCROLL FOR NEXT