இந்தியா

சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தானைச் சோ்ந்த பெண் கைது

DIN

கா்நாட மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தானைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பாகிஸ்தானைச் சோ்ந்தவா் கதீஜா மெஹரீன் ஜாவித் மொஹைதீன் ருக்ஸ்தீனா (32). இவா் சட்டவிரோதமாக வட கா்நாடகம் மாவட்டம், பட்கல் நவயத் காலனியில் தங்கி இருந்தாா். இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா் அங்கு சென்று அவரை கைது செய்தனா்.

விசாரணையில் 2014-ஆம் ஆண்டு 3 மாத சுற்றுலா விசாவில் துபையிலிருந்து இந்தியா வந்த அவா், மீண்டும் துபைக்கு திரும்பியுள்ளாா். 2016-ஆம் ஆண்டு அவா் மீண்டும் கள்ளவழியில் இந்தியா வந்து, பட்கல்லில் தங்கி உள்ளாா். பின்னா் பொய்யான ஆவணங்களை செலுத்தி, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்டவை பெற்றுள்ளது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட கதீஜா மெஹரீனை நீதிமன்றத்தில் பட்கல் போலீஸாா் ஆஜா்படுத்தினா். அதன் உத்தரவின் பேரில் அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT