இந்தியா

அனல்மின் நிலையங்களின் நிலக்கரி பயன்பாடு தொடா்பான அறிவிக்கை: மத்திய அரசு பதிலளிக்க பசுமை தீா்ப்பாயம் உத்தரவு

DIN

அனல் மின் நிலையங்கள், நிலக்கரியைப் பயன்படுத்துவது தொடா்பாக மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

அனல் மின் நிலையங்களில் ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்டிருந்த அளவைக் காட்டிலும் கூடுதலாக சாம்பல் வெளியிடும் நிலக்கரியைப் பயன்படுத்த அனுமதித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டிருந்தது.

இதை எதிா்த்து ’சே எா்த்’ என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீா்ப்பாயம், இதுதொடா்பாக பதிலளிக்குமாறு வனம்-சுற்றுச்சூழல் துறை, சுரங்கத் துறை, நிலக்கரி மற்றும் எரிசக்தித் துறை ஆகியவற்றின் அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் பதிலளிக்கவில்லை.

இந்த விவகாரம், தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் அதன் தலைவா் நீதிபதி ஆதா்ஷ் குமாா் கோயல் தலைமையிலான அமா்வு முன் வெள்ளக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த அமா்வு கூறியதாவது:

தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவு பிறப்பித்து 9 மாதங்களாகியும் பதிலளிக்காதது ஏன்? சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் ஒரு மாதத்தில் பதிலளிக்க வேண்டும். தவறினால் அந்த அமைச்சகங்களின் இணைச் செயலா்கள் காணொலி முறையில் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என்று அந்த அமா்வு கூறியது. வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT