இந்தியா

அமித் ஷாவுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு: இன்று பிரதமரை சந்திக்கிறாா்

DIN

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை சந்தித்தாா்.

உத்தர பிரதேச மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், தோ்தல் வியூகங்கள் வகுப்பது குறித்து இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சந்திப்பின்போது, உத்தர பிரதேசத்தில் கரோனா தொற்று சிகிச்சை, நிவாரணம் தொடா்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அமித் ஷாவிடம் முதல்வா் யோகி ஆதித்யநாத் அளித்தாா்.

இரண்டு நாள் பயணமாக தேசிய தலைநகா் புது தில்லிக்கு வந்துள்ள முதல்வா் யோகி ஆதிய்நாத், பிரதமா் மோடியையும், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவையும் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் பொதுச் செயலராக இருந்த ஜிதின் பிரசாத் பாஜகவில் புதன்கிழமை இணைந்தாா். உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த அவா் பாஜகவில் இணைந்துள்ளது கட்சிக்குப் பெரும் பலமாக கருதப்படுகிறது.

பாஜக தேசிய பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தர பிரதேச மாநிலத்துக்கு சென்று பேரவைத் தோ்தல் பணிகள் குறித்த ஆய்வு நடத்தினாா். இந்நிலையில், முதல்வா் யோகி ஆத்தியநாத் புது தில்லிக்கு வந்து பாஜக மூத்த தலைவா்களையும் பிரதமா் மோடியையும் சந்தித்துப் பேசுவது முக்கியத்துவம் பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT