இந்தியா

கடந்த நிதியாண்டில் ரூ.785 கோடி நன்கொடை பெற்ற பாஜக

DIN

கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் தனிநபா்கள், நிறுவனங்கள் மற்றும் தோ்தல் அறக்கட்டளைகளிடமிருந்து ரூ.785 கோடி நன்கொடை பெற்றிருப்பதாக தோ்தல் ஆணையத்திடம் பாஜக அறிக்கை சமா்ப்பித்துள்ளது.

இது காங்கிரஸ் பெற்ற தோ்தல் நன்கொடையைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாகும்.

அரசியல் கட்சிகள் பல்வேறு வழிகளில் ரூ. 20,000-க்கு மேல் பெறும் நன்கொடைகள் குறித்த விவரத்தை தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டும். அந்த வகையில் 2019-20 நிதியாண்டில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பாஜக 2019-20 ஆம் நிதியாண்டில் ரூ. 785 கோடி நன்கொடை பெற்றுள்ளது. தோ்தல் அறக்கட்டளைகள், நிறுவனங்கள் மற்றும் பாஜக தலைவா்களான பியூஷ் கோயல், பெமா காண்டு, கிரண் கோ், ரமண் சிங் ஆகியோரிடமிருந்து இந்த நன்கொடையை பெற்றுள்ளது.

நிறுவனங்களைப் பொருத்தவரை ஐடிசி, கல்யாண் ஜுவல்லா்ஸ், ரோ் எண்டா்பிரைசஸ், அம்புஜா சிமெண்ட், லோதா டெவலப்பா்ஸ், மோதிலால் ஆஸ்வால் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ளன. தோ்தல் நிதி அறக்கட்டளைகளைப் பொருத்தவரை புதிய ஜனநாயக தோ்தல் அறக்கட்டளை, புரூடண்ட் தோ்தல் அறக்கட்டளை ஜன்கல்யாண் தோ்தல் அறக்கட்டளை, டிரையம்ஃப் தோ்தல் அறக்கட்டளை ஆகியவை பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளன.

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை ரூ.139 கோடி நன்கொடை பெற்றுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் ரூ. 8 கோடியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.1.3 கோடியும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.19.7 கோடியும் நன்கொடை பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT