இந்தியா

குவைத் பிரதமருடன் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்திப்பு

DIN

அரசு முறைப் பயணமாக குவைத் வந்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு பிரதமா் ஷேக் சபா காலித் அல்-ஹமாத் அல்-சபாவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது இந்தியா-குவைத் இடையேயான உறவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதில் உறுதியாக இருக்கும் குவைத் பிரதமருக்கு அவா் பாராட்டு தெரிவித்தாா்.

இதுகுறித்து எஸ்.ஜெய்சங்கா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: குவைத் பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா-குவைத் இடையே தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டதன் 60-ஆவது ஆண்டையொட்டி இந்தியா சாா்பில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

கரோனாவுக்கு எதிராக போரில் இணைந்து செயல்பட்டதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுவடைந்துள்ளது. இந்த உறவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதில் உறுதியாக இருக்கும் குவைத் பிரதமருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்தப் பதிவில் எஸ்.ஜெய்சங்கா் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தப் பயணத்தின்போது குவைத் இளவரசா் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவுக்கு பிரதமா் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் எழுதியுள்ள கடிதத்தை அவரிடம் கொடுக்கவுள்ளாா்.

குவைத் வெளியுறவு அமைச்சா் ஷேக் அகமது கடந்த மாா்ச் மாதம் இந்தியா வந்தாா். அப்போது, எரிசக்தி, வா்த்தகம், முதலீடு, தொழிலாளா், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க கூட்டுக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் தொடா்ச்சியாக அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரின் குவைத் பயணம் அமைந்துள்ளது.

குவைத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்கள் வசிக்கின்றனா். குவைத்தின் மிகப்பெரிய வா்த்தக கூட்டாளியாக இந்தியாவும், இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் வழங்கும் முக்கிய நாடாக குவைத்தும் விளங்குகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT