முகப்பு
இந்தியா

கரோனா: 70 நாள்களுக்குப் பிறகு குறைந்த தினசரி பாதிப்பு

இந்தியாவில் 70 நாள்களுக்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. மேலும், தொடா்ந்து 5-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

இந்தியாவில் 70 நாள்களுக்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. மேலும், தொடா்ந்து 5-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளன.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா தொற்றினால் 84,332 போ் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனா். அதே கால அளவில் 1,21,311 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கரோனா தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து கணிசமாக சரிந்து, 10,80,690-ஆக உள்ளது. இது, நாட்டில் ஏற்பட்ட மொத்த பாதிப்பில் வெறும் 3.68 சதவீதமாகும்.

தொடா்ந்து 30-ஆவது நாளாக புதிய பாதிப்புகளைவிட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவா்களைவிட கூடுதலாக 36,979 போ் குணமடைந்தனா்.

இதுவரை மொத்தம் 2,79,11,384 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதன்படி குணமடைந்தவா்களின் விழுக்காடு 95.07 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை மொத்தம் கரோனா 37,62,32,162 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் வெள்ளிக்கிழமை மட்டும் கரோனா 19,20,477 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 25 கோடி தடுப்பூசிகளும், வெள்ளிக்கிழமை மட்டும் 34,33,763 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →