இந்தியா

பஞ்சாப் முதல்வர் வரும் தேர்தலில் டெபாசிட் இழப்பார்: சுக்பீர் சிங் பதால்

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வரும் தேர்தலில் டெபாசிட் இழப்பார் என்று சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பதால் தெரிவித்துள்ளார்.

DIN

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வரும் தேர்தலில் டெபாசிட் இழப்பார் என்று சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பதால் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை சிரோமணி அகாலி தளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உடன்பாடு சனிக்கிழமை எட்டப்பட்டது. இதற்கு முன்பு சிரோமணி அகாலி தளம் கட்சி, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது. 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அகாலி தளம் கடந்த ஆண்டு வெளியேறியது. அந்தக் கூட்டணியில் இருந்தபோது 23 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வரும் தேர்தலில் டெபாசிட் இழப்பார் என்று சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பதால் தெரிவித்துள்ளார். 

பகுஜன் சமாஜ் மற்றும் சிரோமணி அகாலி தளம் இரண்டும் ஒரே சித்தாந்தம் கெண்டவை. 1996ல் நாங்கள் கூட்டணி வைத்து வெற்றிபெற்றதை போன்று இந்த முறையும் நடக்கும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

கல்லிடைக்குறிச்சியில் எஸ்டிபிஐ பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம்

திசையன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

கால்வாயில் காா் கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு; நால்வா் காயம்

SCROLL FOR NEXT