இந்தியா

நாட்டில் கரோனா நிலவரம்: சில முக்கிய விவரங்கள்

ANI

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60,471 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 75 நாள்களுக்குப் பிறகு பதிவாகம் குறைந்த பாதிப்பு அளவாகும்.

நேற்று ஒரே நாளில் கரோனா பாதித்த 2,726 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 1.17 லட்சம் பேர் குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்த புள்ளி விவரத்தை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், புதிதாக 60,471 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,95,70,881 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, குணமடைவோர் விகிதம் 95.64 சதவீதமாகவும், கரோனா உறுதி செய்யப்படுவோர் விகிதம் 5 சதவீதத்துக்கும் குறைவாக அதாவது 4.39 சதவீதமாகவும் உள்ளது.

மேலும் 1,17,525 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 2,82,80,472 ஆக உயர்ந்துள்ளது. 2726 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 3,77,031 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 9,13,378 பேர் நோய்த் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

இதுவரை மொத்தம் 25,90,44,072 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT