இந்தியா

கரோனா மருந்துப் பொருள்கள் மீதானஜிஎஸ்டி குறைப்பு: அரசாணை வெளியீடு

DIN

கருப்புப் பூஞ்சை மருந்து, கரோனா சிகிச்சை மருந்து உள்ளிட்டவற்றின் மீது விதிக்கப்பட்ட சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதற்கான அரசாணையை திங்கள்கிழமை மத்திய அரசு வெளியிட்டது.

கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் டோசிலிஜுமாப், கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ஆம்ஃபோடெரிசின்-பி ஆகிய மருந்துகள் மீது விதிக்கப்பட்டு வந்த 5 சதவீத சரக்கு-சேவை வரியை ரத்து செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த 12-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.

கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் பயன்படும் ரெம்டெசிவிா், ஹெபாரின், மருத்துவ தர ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், செயற்கை சுவாச கருவி (வெண்டிலேட்டா்), கரோனா பரிசோதனைக் கருவிகள், பல்ஸ் ஆக்சிமீட்டா் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டு வந்த 12 சதவீத சரக்கு-சேவை வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

கை சுத்திகரிப்பான், உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவிகள் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்ட 18 சதவீத சரக்கு-சேவை வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அவசர சிகிச்சை ஊா்தி (ஆம்புலன்ஸ்) மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

மருந்துப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் மீது சரக்கு-சேவை வரி குறைக்கப்பட்டதற்கான அரசாணையை மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய்த் துறை வெளியிட்டுள்ளது. இந்த வரி குறைப்பு செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT