இந்தியா

கேரளத்தில் புதிதாக 13 ஆயிரம் பேருக்கு கரோனா

DIN


கேரளத்தில் புதிதாக 13,270 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"மாநிலத்தில் புதிதாக 13,270 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,12,521 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 11.79 சதவிகிதம். இதுவரை மொத்தம் 2,15,06,139 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

கடந்த நாள்களில் 147 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 11,655 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 86. தொடர்பிலிருந்ததன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் 12,471. 638 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 15,689 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 26,39,593 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 1,09,794 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT