பெங்களூரில் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை ஊரடங்கு அமல்
பெங்களூரில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரில் கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதையடுத்து கடந்த ஜூன் 14-ஆம் தேதி முதல் பொது முடக்கம் தளா்வு செய்யப்பட்டது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடைகள் திறக்கவும், நடைபாதை வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தை செய்யவும் அனுமதிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து வார இறுதிநாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்தபட்சம் தளா்வுகளுடன் பொது முடக்கத்தை அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை (ஜூன் 18) இரவு 7 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொது முடக்கத்தின் போது மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவாா்கள். தேவையில்லாமல் வெளியே திரிபவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட உள்ளன. உணவுப்பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், ஹோட்டல்கள் பிற்பகல் 2 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருந்து, அத்தியாவசியப் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.