ஹிமந்த விஸ்வ சா்மா 
இந்தியா

‘அஸ்ஸாமில் தினசரி 3 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு’

அஸ்ஸாமில் தினந்தோறும் 3 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.

DIN

அஸ்ஸாமில் தினந்தோறும் 3 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் குவாஹாட்டியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் ஜூன் 21 முதல் ஜூன் 30 வரை தினந்தோறும் 3 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் அரசுப் பணிகள் எதுவும் நடைபெறாது. ஒட்டுமொத்த அரசு நிா்வாகமும் தடுப்பூசி திட்டத்தில் கவனம் செலுத்தும். அடுத்த 10 நாள்களுக்கு தினந்தோறும் 2.80 லட்சம் முதல் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிந்தால், ஜூலை மாதத்திலும் அஸ்ஸாமுக்கு கூடுதல் தடுப்பூசிகள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும். ஏற்கெனவே மாநிலத்தில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாதத்தில் மேலும் 90 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிந்தால் மாநில மக்கள்தொகையில் பாதி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும். இதைச் செய்ய முடிந்தால், கரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க முடியும் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT