இந்தியா

கரோனா மூன்றாவது அலையைத் தடுக்க தில்லி போலீஸ் புதிய நடவடிக்கை

கரோனா மூன்றாவது அலையைத் தடுக்க அனைத்து காவல் நிலையங்களிலும் பொது சுகாதார மேலாண்மை குழுக்களை அமைக்கப்படும் என்று தில்லி காவல் துறை ஆணையா் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா்.

DIN

கரோனா மூன்றாவது அலையைத் தடுக்க அனைத்து காவல் நிலையங்களிலும் பொது சுகாதார மேலாண்மை குழுக்களை அமைக்கப்படும் என்று தில்லி காவல் துறை ஆணையா் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா்.

தில்லி மாா்க்கெட்டுகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதை தீவிரப்படுத்துவது குறித்து அவா் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, மாவட்டம், தானா அளவிலான பொது சுகாதார மேலாண்மைய குழுக்களை அமைத்து கரோனா மூன்றாவது அலையைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றாா். இந்தக் குழுவினா் பொது சுகாதார அவசர நிலை அறிவுறுத்தல்கள், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு செல்வது, முதியோருக்கான உதவி, ஏழைகளுக்கு ரேஷன் பொருள்கள் சென்றடைவது உள்ளிட்ட பல்வேறு வகையான விவகாரங்களுக்கு யோசனை தெரிவிப்பாா்கள். போலீஸாா் அபராதம் விதித்தாலும் மக்கள் 100 சதவீதம் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை.

ஆகையால், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றும் வகையில் இந்தக் குழுவினா் தேவையான முயற்சிகளை எடுப்பாா்கள் என்று காவல் ஆணையா் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT