நாட்டில் இதுவரை 28 கோடி பேருக்கு தடுப்பூசி : சுகாதாரத் துறை
கடந்த 24 மணி நேரத்தில் 30,39,996 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா 2-வது அலை பரவி வரும் நிலையில், இதுவரை 28 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகளைப் பெற்று மாநில சுகாதாரத் துறை சார்பில் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 30,39,996 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 28,00,36,898-ஆக அதிகரித்துள்ளது.