இந்தியா

மகாராஷ்டிரம்: ஊக்கத்தொகை வழங்கக்கோரி செவிலியர்கள் போராட்டம்

DIN


மகாராஷ்டிரத்தில் ஊக்கத்தொகை வழங்கக்கோரி அரசு மருத்துவமனை செவிலியர்கள் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பணியில் பதவி உயர்வு வழங்காததைக் கண்டித்தும் செவிலியர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

மகாராஷ்டிரத்தில் கரோனா இரண்டாம் அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கரோனா பேரிடர் காலத்தில் அயராது உழைக்கும் செவிலியர்கள் தங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

இந்த கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காததால், மருத்துவமனை செவிலியர்கள்  48 மணிநேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த போராட்டத்தில் மாநிலத்தின் 24 மாவட்டங்களைச் சேர்ந்த 1,300 செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர். அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில், போராட்டம் தொடரும் என்றும் செவிலியர்கள் அறிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT