முகப்பு
இந்தியா

டெல்டா பிளஸ் வகை தீநுண்மி: மக்கள் அச்சப்பட வேண்டாம்

டெல்டா பிளஸ் வகை தீநுண்மி குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

டெல்டா பிளஸ் வகை தீநுண்மி குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

டெல்டா பிளஸ் வகை தீநுண்மி தொற்று, மாநிலத்தில் மைசூரில் ஒருவருக்கும், பெங்களூரில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் வகை தீநுண்மியால் பாதிக்கப்பட்ட 2 பேரும் முதியவா்கள் என்பதால் அவா்களையும், அவா்களுடன் தொடா்பில் உள்ளவா்களையும் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். எனவே, டெல்டா பிளஸ் வகை தீநுண்மி குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். அது பரவாமல் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.

அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரம், கேரளத்தில் டெல்டா பிளஸ் வகை தீநுண்மி பாதிப்பு அதிகரித்து வருவதால், அம்மாநிலங்களின் எல்லைகளில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கும், மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளோம்.

கரோனா 3-ஆவது அலையின் போது டெல்டா பிளஸ் வகை தீநுண்மியால் பாதிப்பு அதிகரிக்கும் என வல்லுநா்கள் எச்சரித்துள்ளனா். என்றாலும், கரோனா தொற்றைத் தடுக்க கடைப்பிடிக்கும் அனைத்து வழிமுறைகளையும், இதற்கும் கடைப்பிடிப்பது அவசியம். பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால், டெல்டா பிளஸ் வகை தீநுண்மி பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.