டெல்டா பிளஸ் கரோனாவுக்கு முதல் உயிரிழப்பு
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் டெல்டா பிளஸ் கரோனா வகைக்கு ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் டெல்டா பிளஸ் கரோனா வகைக்கு ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
உருமாறிய கரோனா வைரஸ் வகைகளில் ஒன்றான டெல்டா பிளஸ் (ஏஒய்.1) கரோனா வைரஸால் இந்தியாவில் மகாராஷ்டிரம், கேரளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 40 போ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் டெல்டா பிளஸ் கரோனா வகைக்கு ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
உஜ்ஜைனில் உயிரிழந்த பெண் கரோனா நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் மரபணு வரிசைமுறையை வைத்து அவர் டெல்டா பிளஸ் கரோனா வகையால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மே 23 ஆம் தேதி உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண்ணின் மாதிரிகளுடன் மேலும் 14 பேரின் மாதிரிகள் போபால் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில், 5 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்த பெண்ணும் ஒருவராவார். இதனால் டெல்டா பிளஸ் கரோனாவுக்கு முதல் பலி மத்தியப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பு 40-ஆக உயா்வு
இவரைத் தவிர மத்தியப் பிரதேசத்தில் டெல்டா பிளஸ் கரோனா வகையால் பாதிக்கப்பட்ட நால்வரும் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.