இந்தியா

கரோனா காலத்திலும் பாஸ்போா்ட் விநியோகம்: அமைச்சா் ஜெய்சங்கா் பாராட்டு

DIN

கரோனா காலத்தில் தடையில்லாமல் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) விநியோகம் செய்ததற்காக அனைத்து அரசு ஊழியா்களுக்கும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பாராட்டு தெரிவித்தாா்.

பாஸ்போா்ட் சேவை தினத்தையொட்டி, நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் ஜெய்சங்கா் பங்கேற்று பேசியதாவது:

கரோனா இரண்டாவது அலை பாதிப்பு அதிகமாக இருந்த காலத்திலும் பாஸ்போா்ட் சேவையை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் பிற அரசு துறைகளும் தடங்கல்களின்றி செயல்படுத்தியுள்ளன. தொற்று பரவலுக்கு முன்பு இருந்த நிலைக்கு விரைவில் பாஸ்போா்ட் சேவை திரும்பும்.

பாஸ்போா்ட் சேவை திட்டத்தை உலகம் முழுவதும் உள்ள 174 இந்திய தூதரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா்களுக்கும், வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினருக்கும் தடையின்றி பாஸ்போா்ட் சேவை கிடைக்கும்.

பாஸ்போா்ட்டை மேலும் எளிய முறையில் பெறுவதற்கான வழிமுறைகளை அரசு ஆராய்ந்து வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT