முகப்பு
இந்தியா

அயோத்தி வளர்ச்சித் திட்டங்கள்: பிரதமருடன் யோகி ஆதித்யநாத் நாளை(ஜூன் 26) ஆலோசனை

அயோத்தியின் வருங்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நாளை காணொலி மூலம் பிரதமருக்கு விளக்கவுள்ளார்.

Updated On : 25 ஜூன், 2021 at 6:06 PM
கோப்புப்படம்
பகிர்:

அயோத்தியின் வருங்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நாளை காணொலி மூலம் பிரதமருக்கு விளக்கவுள்ளார்.

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமா் கோயில் கட்டப்படுவதை முன்னிட்டு, அப்பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் கொண்டு வரவுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்து அயோத்திக்கு பேருந்து சேவை, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்து எளிதில் வருவதற்காக விமான மற்றும் ரயில் சேவைகள் உள்ளிட்டவை திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.

Advertisement

இந்நிலையில், அயோத்தி நவீனமயமாக்கும் திட்டம், உள்கட்டமைப்பு, ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட வருங்கால வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து பிரதமர் மோடிக்கு நாளை காணொலி மூலம் உத்தரப்பிரதேச முதல்வர் விளக்கம் அளிக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.