இந்தியா

15 ஆண்டுகளுக்குப் பிறகு ரயிலில் பயணித்த முதல் குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தில்லி சஃப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனது பிறப்பிடத்துக்கு இன்று ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ANI

புது தில்லி: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தில்லி சஃப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனது பிறப்பிடத்துக்கு இன்று ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி இன்று சஃப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரயிலில் கான்பூர் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே வாரிய தலைவர் மற்றும் செயல் தலைவர் சுநீத் ஷர்மா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவா் ஒருவா் ரயிலில் பயணிப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன் கடந்த 2006-ஆம் ஆண்டு ஏபிஜே அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது இந்திய ராணுவ அகாதெமி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தில்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் டேராடூனுக்கு சிறப்பு ரயிலில் பயணித்தாா்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனது பிறப்பிடமான பரெளன்க் கிராமத்துக்கு செல்கிறார்.

இதற்காக தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் ரயில் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவா் பயணிக்கும் ரயில் கான்பூா் தேஹாத்தில் உள்ள ஜின்ஜக் மற்றும் ரூரா இடங்களில் நிற்கும். தனது பள்ளிப் பருவத்திலும், சமூக சேவையில் ஈடுபட்டு வந்த நாள்களிலும் அறிமுகமானவா்களுடன் இவ்விரு இடங்களில் குடியரசுத் தலைவா் கலந்துரையாடுகிறார்.

குடியரசுத் தலைவரான பிறகு ராம்நாத் கோவிந்த் தனது பிறப்பிடத்துக்கு முதல்முறையாக செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

இந்த நாள் இனிய நாள்!

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT